Posts

Showing posts from April, 2023

42 - விஸ்வநாத தாஸ்

   விடுதலை பெற்ற தேசத்தைக் காணத் தன் நடிப்பாலும் பாட்டாலும் மகத்தான தன் போர்க்குணத்-தாலும் தொண்டு செய்த மாபெரும் கலைஞர் விசுவநாததாஸ், மறக்கப்பட்ட பெரும் ஆளுமைகளில் ஒருவர். அவர் காலத்தில் அவருக்கு இணை சொல்லத்தக்க நாடகக் கலைஞர் இந்திய அளவிலேகூட மிகச் சிலரே இருந்தார்கள். 1886-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் நாளில் சிவகாசியைச் சேர்ந்த சுப்பிரமணிய பண்டிதருக்கும் ஞானாம்பாள் அம்மைக்கும் மூத்த மகனாகப் பிறந்தார் விசுவநாததாஸ்.  மருத்துவர் வகுப்பைச் சேர்ந்தவர். சித்த மருத்துவத்தைத் தமிழர்களுக்குப் பிரயோகித்து நோய் தீர்க்கும் பணியைச் செய்த வகுப்பு அது. ஆனால் அது தாழ்த்தப்பட்ட வகுப்பாய் இருந்தது தான் வேதனை விசுவநாததாஸின் இயற்பெயர் தாசரிதாஸ்.  சிவகாசியிலும், பாட்டன் ஊரான திருமங்கலத்திலும், திருப்பாவை பஜனை கோஷ்டியில் பாடுவது என்பதாக தாஸின் இசைப்பணி தொடங்கி இருக்கிறது. சட்டென இசையில் நுட்பங்களைப் பிடித்துக்கொண்டு பாடும் ஆற்றல், தாஸுக்கு மிக இயல்பாகக் கைவந்தது. எட்டு வயதுக்குள் ஊர்ப் பண்டிகை நிகழ்ச்சிகள், கோயில் நிகழ்ச்சிகள் தாஸ் இல்லாமல் நடவாது என்ற நிலையை உருவாக்கினார் சிறுவன் தாஸ். வெண்கலக் குரலா